இளையான்குடி மாற நாயனார் – வறுமையிலும் பக்தி

இளையான்குடி மாற நாயனார்

இளையான்குடி மாற நாயனார் வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு, சிவனடியாருக்கு அமுதளிக்க முற்பட்ட வேளாளர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் உழவுத் தொழில் செய்து வந்தார். உழவுத் தொழிலைச் செய்பவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.

Continue reading “இளையான்குடி மாற நாயனார் – வறுமையிலும் பக்தி”

காற்றுவெளி – கலை இலக்கிய இதழ்

காற்றுவெளி

காற்றுவெளி என்ற கலை இலக்கிய இதழ், எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களின் பெருமுயற்சியால், சோபா அவர்கள் ஆசிரியராக இருந்து 09-ஜூன்-2010 அன்று லண்டனில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் புகழேந்தி என்பவரும், ஜெர்மனியில் மூனா என்பவரும் இவ்விதழ் நடைபெற அனைத்துப் பணிகளையும் செய்து உதவினர்.

மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம்.

Continue reading “காற்றுவெளி – கலை இலக்கிய இதழ்”

மெய்ப்பாடு – கவிதை

மெய்ப்பாடு

மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்

மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு

(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)

கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து

முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து

திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்

சுவையோ நகை 

Continue reading “மெய்ப்பாடு – கவிதை”

பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை

பொருந்தாத இரக்கம் - சிறுகதை

“ஐயா, எங்காத்துகார‌ருக்கு நாகமல முருகன் கோவில் பூசை முறைய, ரகு பட்டர்ட்ட இருந்து வாங்கிக் கொடுங்க” என்றபடி தர்மகர்த்தா முன்பு மங்களம் பவ்யமாக நின்றாள்.

“ஏம்மா, என்னாச்சு?” என்று தர்மகர்த்தா மிடுக்காக் கேட்டார்.

“பெத்தா கோவில் மடப்பள்ளியில பார்க்கற வேலைக்கு தர்ற வருமானம் குடும்பத்துக்குப் பத்தல. அதனால நாகமல முருகன் கோவில் கார்த்திகைப் பூசை முறைய மட்டும் எங்காத்துகாரருக்கு கொடுத்தா, எங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வரும்.” என்றாள் தர்மகர்த்தாவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்கி.

Continue reading “பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை”