காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
நெகிழியில் அடைத்த பால் கவரோ
நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு
வாசலை அடையும் இக்காலம்…
அது ஒரு அழகிய கனாக்காலம்
என கடந்தன நினைவுகள் இக்கணமே…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942