கி.அன்புமொழி ஆசிரியப் பேரொளி விருது பெற்றிருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பில் வருடாவருடம் ஆசிரியர் தின விழா நடத்தி, அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை இனம்கண்டு, ஆசிரியப் பேரொளி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் செம்பனார்கோயில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரியும் எழுத்தாளர் கி.அன்புமொழி அவர்களுக்கு ஆசிரியப் பேரொளி விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற கி.அன்புமொழி அவர்களை இனிது வாழ்த்துகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!