இசைக்கருவிகள் தானாய் இசைப்பதில்லை
விரல்கள் தழுவினும் இசை எழுவதில்லை
இசைப்பவன் மனதில் இருக்கும் இசைதான்
ஏழு ஸ்வரங்களாய் நடந்திட தயங்கவில்லை
இசையின் பிறப்பிடம் நம் மனமே என்றால்
அதில் பிழையும் இல்லை
மனதின் எண்ணம் செம்மையாய் இருந்திடும்
நிலையில் நம் செயல்கள் எல்லாம்
இசை போல் இனிக்கும்!
நாம் வாழும் சூழலில் நன்மையே பிறக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942