இணைந்த கைகள்
நான்கானால் எதிர்ப்பு
இருப்பினும் தகர்த்தே
நாளைகளின் வெற்றியாகலாம்…
வானத்தில் ஆயிரம்
விண்மீன்கள் மின்மினுத்தாலும்
வானின் அரசி
வெண்ணிலா அன்றோ?
வானவில்லும் கணமே
வந்து போயினும்
வண்ணங்களின் தூரிகையாய்
வரப்பிரசாதம் ஆகுதே…
கனவுகளின் கற்பனைகள்
களவாடப் படாமலே
கவினுறு நினைவுகளின்
கற்சிலையாய் வடிவாகட்டுமே…
வாழ்க்கையை வாழ்ந்திட
வந்த நாமே
புகழோடு உயர்வுகள் பெற்றிட
கண்டிடலாமே நல்வாழ்வு…
இரஜகை நிலவன்
மும்பை