இருசக்கர வாகனம் இருக்கையில்
இளைய இருபறவை இருக்கையில்!
இறகோடு இறகாக
இளைப்பாறும் காட்சி
இதழ் இன்பம் தந்து
இனிதாகும் காட்சி
இரவெல்லாம் இமைமூடா
இனிமை காட்சி!
இல்லத்தில் கண்ட
இணையில்லா காட்சி
இறுக்கமான இதயமும்
இலகுவாகும் காட்சி!
இன்றிரவு காணும்
இக்காட்சி வாய்க்குமா
இனி இறைவா!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
மறுமொழி இடவும்