மார்கழி காலை
மஞ்சள் வண்ணப் பூக்களுடன்
பல வண்ணக் கோலங்கள்
பார்வைக்கு விருந்தாகும்!
பாவையரைக் காண்பதற்கு
மாடு மேய்க்கும் கண்ணன் காலையிலும்
ஆடு மேய்க்கும் இயேசு மாலையிலும்
வீதி தோறும் வலம் வரும் மாதம் இது…
இதமான குளிர் காலை
கண்ணனைக் காண்பதற்கும்
பதமான அந்தி வேளை
பரமபிதா பார்பதற்க்கும்
தடையாக இருப்பது
கைபேசி ராட்சசியே…
நெடுநேரம் விழிக்க வைத்து
அதிகாலை தூங்க விடும் நீ
இல்லாதிருந்த காலம்
இறைவனோடு வாழ்ந்த காலம்…
கைபேசி: 9865802942