பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!
சில பல தடை கற்கள்
எவர் வாழ்விலும் எதிர் உண்டு
நிலையுடன் எதிர் நடந்தால்
அடைவது கோபுரமே!
உடல் வலி செயலர்கள்
அறிவுடை அதிபர்கள்
ஒருபட திறம்பட செயல்பட
வெற்றி இலக்கது இலகுவே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com