தெய்வம் தந்ததா! இல்லை தேவதை தானா?
என்ன சொல்ல, என்கனவில் வந்தவள்தானா?
பொய்யிலை தானா? இனிநான் உன்னுடன்தானா?
போதும் இனி வேறு தேவையில்லை என்பேனா?
மையிட்ட கண்ணுக்குள்ளே நானிருப்பேனா?
மயக்கும் உன் புன்னகைக்குள் மாய்ந்திருப்பேனா?
தைப்பிறக்க பொங்கல் வைக்க காத்திருப்பேனா?
அத்தை மகள் உனக்கென வாழ்ந்திருப்பேனா?
வெயில் பட்ட பனிபோல மாறிடுவேனா?
வேகமாக வீசும் காற்றைப் போல் திரிவேனா?
பொய்கையில் பூத்த பூவாய் உனைக் காண்பேனா?
பொன்னந்திப் பொழுதென தோளில் சாய்வேனா?
கைகோர்த்து நீ நடக்க பின்தொடர்வேனா?
கால் கொலுசின் ஒலி என் மூச்சென்பேனா?
பைங்கிளி நீ பேசும் மொழி தேனென்பேனா?
பாடிப்பாடி நீ மகிழ பார்த்திருப்பேனா?
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்