பச்சை பசேல் தாவரம்
பலவும் உண்டு பாரினில்!
பகலின் ஒளியும் நீரும்
பச்சையமும் சேர்ந்திட
உண்ண உணவு ஆகிடும்!
உயிர் வளியும் வந்திடும்!
உணவில் ஆற்றல் உள்ளதால்
உண்ண விலங்கு வந்தன
உயிர்கள் பல பெருகவே
உயிர்க்கோளம் ஆனது பூமியே!
மனதில் கொள்ள வேண்டியது
என்ன வென்று சொல்லவா?
உயிர்கள் நன்றாய் வாழவே
உயிரற்ற நீரும் காற்றும் வேண்டுமே!
இயற்கை தந்த இவையெல்லாம்
செயற்கையாய் செய்யவே
துளியும் வாய்ப்பு இல்லையே!
உன்னதத்தில் உன்னதம் இயற்கையே
என்றுணர்ந்த காரணத்தால்
உயிர் தந்த இயற்கையை
இமைப்பொழுதும் காத்திடுவோம்!
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!