பாட்டி எங்கள் பாட்டி – எல்லாப்
பல்லும் போன பாட்டி.
கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்
கேட்கச் செய்யும் பாட்டி.
கடின மான பண்டம் – அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி.
படிப்பே யில்லாப் பாட்டி – ஆனால்,
பலவுங் கற்ற பாட்டி.
விடுக தைகள் போட்டே – என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு டுவய தாச்சு – கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.
அப்பா அடித்துப் போட்டால் – என்னை
அணைத்துத் தேற்றும் பாட்டி.
தப்போ, தவறோ செய்தால் – என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.
சாய்ந்து மடியில் படுத்தால் – என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால் – அதை
நொடியில் போக்கும் பாட்டி.
யாருங் காட்டா அன்பை – என்றும்
எனக்கு காட்டும் பாட்டி.
நூறு, நூறு ஆண்டு – இன்னும்
நூறு ஆண்டு வாழ்க!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!