நடராஜர்

என்ன புண்ணியம் செய்தேனோ?

என்ன புண்ணியம் செய்தேனோ?
அம்பலத்தய்யனை – தில்லை
அம்பலத்தய்யனைக் கண் குளிரக் காண
என்ன புண்ணியம் செய்தேனோ?

முன் செய்த தவமோ
முக்கண்ணன் அருளோ
இச்சென்மம் தனிலே
இறை தரிசனம் காணவே!

இச்சுவைத் தானோ சுவைத்திட
இத்தனை காலம்
நஞ்சுண்டன் நாதனை
சொல் தேனில் பாடவே…

முன்னை எத்தனை பிறவியோ?
இனியும் உண்டோ உலகிலே?
பித்தனை அத்தனாய்க் கொண்ட பின்
அவன் அருள் ஒன்றே இன்பமே –
உருத்திரன் தரிசனம் ஆகுமே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்