உலகு பரந்த மொழியே
உயர்ந்தோர்கள் வழியே
உருவான தமிழே
நீ வாழியவே!
மிளிர்கின்ற மொழியாம்
உனைப் பார்த்துத்தானே
மேல்நாட்டு அறிஞர்
வியந்திடவே
அழகே என் அமுதே
அறிவார்ந்த மொழியே
உனை உள்ள அறையில்
வைத்து வணங்கிடுவேன்!
கண்ணுக்குள் மணியாய்
கருத்துக்குள் அணியாய்
காட்சி தரும் உன்னைக்
காக்க உழைத்திடுவேன்!
விண்ணோர்கள் விதிக்க
மண்ணோர்கள் மதிக்க
என்னோடு உறவாடும்
செந்தமிழே!
மனதோடு நினைவாய்
நினைவோடு செயலாய்
உனைநானும் துதிப்பேன்
தூய மொழியே!
கலையோடு பிறந்த
நிலையோடு உயர்ந்த
மலையோடு மோதும்
என் பைந்தமிழே!
வண்ணம் பல செறிந்து
எண்ணம் எல்லாம் நிறைந்து
திண்ணம் கொண்ட தமிழே
என் தாய்மொழியே!
த . கிருத்திகா
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!