ஓடும் மின்ரயிலில் அடாவடியாக பணம்
கேட்ட திருநங்கை என் தோளில்
சாய்ந்திருந்த ஐந்து வயது மகனைக் கண்டு
புன்னகைத்து அவனை ஆசீர்வதித்துச் சென்றாள்
அந்த நெரிசலில் அவள் சுடரியாகக் காணப்பட்டாள்
ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு, விசிறி எறியப்பட்ட
சோம்பு பாக்கெட்டுகளுக்கு சண்டை போடுகிறார்கள்
வாசலில் வண்ணப் புத்தகங்கள் விற்கும் சிறுவர்கள்
குளிர்சாதன துணி அங்காடி வெளியே
காவலாளனுக்குப் பயந்து தானியங்கி கதவு
திறக்கும் வரை காத்திருக்கும்
சாலையோரப் பிள்ளைகள்
அறுசுவை உணவு பரிமாறும்
நட்சத்திர ஹோட்டல் பேரர்
எதிரில் உள்ள தள்ளுவண்டிக்
கடையில் கழுத்தில் டையுடன்
முட்டை பரோட்டா உண்ணுகிறார்
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!