குறிஞ்சி நிலம் குறுக்கு ஒடிந்து படுத்துக் கிடக்கு
குறிஞ்சிக் கிழவன் (முருகன்) காவலினால்
சில பகுதி நிமிர்ந்திருக்கு!
முல்லை நிலம் மெல்ல மெல்ல
(சீமை கருவேல) முட்களுக்குள் மூழ்கிருச்சு!
மருதம் இருந்த இடமெல்லாம்
மினுங்கும் கருப்பு சாலைகளா
மாறிக் கிடக்கும் நிலையுமாச்சு!
நெய்தல் இன்று நெகிழியால
விழி பிதுங்கி அலறலாச்சு!
பாலை நிலம் மட்டும் தான்
நாம் வாழும் இடம் எனவும் ஆச்சு!
இந்த நிலை நீடித்தால்
வாழ்க்கை இனி என்னவாகும்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942