ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
இளைப்பாறிட நிழல் கொடுத்த மரம்
இனிய பறவைகள் தங்கிடத் தாங்கும் மரம்
கனிந்த பழங்கள் உதிர்த்த மரம்
கன்றோடு மாடுகள் கூடும் இடம்
காற்றோடு பூவாசம் தந்த மரம்
சாலை விரியப் பலியான மரம்!
காற்றும் காசுக்கு என்றான பின்னே
வரும் கவலைக்கிங்கே
ஏது விடை???
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942