நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்
நித்தம் உன்முகம் கண்டேன் தோழி
வாலைக் குமரி உன்னைப் போலவே
வலமாய் இடமாம் வருகுதே தோழி
காலைக் கதிரினை கரத்தினில் ஏந்தி
கனக நிறத்தினில் மின்னிடும் போதும்
மாலையில் மீண்டும் அதனைத் தழுவி
மக்களில் கடல்நீர் உன்முகம் தானடி
ஏழை மக்களின் வாழ்வினை போற்றி
இனிய இசையினை ஒலித்திடும் போதும்
பேழையில் புதைத்த முத்தினை யொத்த
பெரும்துறையுடன் கடல்நீர் உன்முகம் தானடி
நாளை என்பது இல்லை என்றே
நாளும் உன்துணை நிலைக்கும் வண்ணம்
நிலைத்தே இன்பம் தருகின்ற கடல்நீர்
நெகிழிந்தே சிரிக்கும் உன்முகம் தானடி
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!