கண்ணனின் அழகினிலே
மனதைப் பறி கொடுத்தேன்
அண்ணலின் அருளமுதைப்
பருகிடவே துடித்தேன்
கண்ணனின் திருக்கோலம்
கண்ணுக்கு விருந்தாகும்
எண்ணமெல்லாம் ஒன்றி
எண்ணிடும் பல காலம்.
ஆயிரம் நாமம் அவன்
பேர் சொல்லிடவே
போயிடும் பாவம்
எந்தன் நாள் படவே
காத்திருக்கான் கண்ணன்
திருவல்லிக்கேணியிலே அவன்
நேத்திர தரிசனமே
நம் வாழ்வினியே
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com