கோதை தமிழிருக்க ஏதம் இல்லையடி!
பாவை தமிழ் தொடுக்க இன்பம் பின்னுதடி!
தமிழே இன்னமுதம்
அதனிலும் இவள் பா அமிர்தம்
அமிழ்ந்தே மூழ்கி எழுவோம்
தமிழின் சுவை அறிவோம்!
கண்ணனை உயிர் என்பாள்
அவன் உயிரே இவளாவாள்!
விட்டுச் சித்தரின் செல்வப் பெண்ணாய்
வில்லிபுத்தூர் அவதரித்து
அன்பின் எல்லையிலே
கண்ணனை கைக் கொண்டாள்!
கோதை தவம் இருக்க
கோபாலன் அகமிருக்க
பாவையின் பிரேமையினால்
பார் மகன் கைக் கொண்டான்!
திரு ஆடிப்பூரத்தில் இவள் உதிக்க
பூ உலகமே அதில் மகிழ
பூசனை செய்திட்டு
பூமகள் துணையுடனே
திரு அரங்கனின் அருள் பெறுவோம்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
மறுமொழி இடவும்