கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
கண்ணால் கண்டாலே ஓடிவிடும்
வந்தாலே சோகம் விடும்
கண்ணா தாவி வா! செல்லமே தாவி வா!
கண்ணா தாவி வா! செல்லமே தாவி வா!
அன்பான அன்னை முன்னே
தெய்வங்கள் ஒன்றி விடும்
உன்மேலே கொண்ட அன்பு
வான் போலே ஓங்கிடும்!
மிட்டாய் கொஞ்சம் வேணுமா?
சிட்டாக ஓட வேண்டுமா?
மிட்டாய் கொஞ்சம் வேணுமா?
பின்னே சிட்டாக ஓட வேணுமா?
அம்மாவைப் பாரு
சொல்வதைக் கேளு
எல்லாமே வாங்கித் தருவாள்!
கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
மறுமொழி இடவும்