கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
இதயம் ஒன்றாய் சேர்ந்து விட்டால்
பேசும் மொழியே ஒன்றாகும்!
பேசும் மொழியே ஒன்றானால்
தெய்வக் காதல் வழியாகும்!
வழிகள் வேறாய் பிறந்து வந்தாலும்
விழிகள் ஒன்றாய் கலந்த பின்னாலே
ஒளிரும் பாதை நன்றாய் தோன்றும்!
இனிமை வாழ்வே என்றும் கூடும்!
முப்பால் சொன்ன மூதுரையானும்
இன்பம் சொன்னார் தப்பாது!
இதை நன்கு கற்றாலே
விரும்பும் காதல் தன்னால் சேரும்
இருவர் நிலையும் ஒன்றாகும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
Super