வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!
கானம் பாடி கைகோர்க்க
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!
மழை கொண்ட மேகம் மெல்லத் தழுவி
முத்தம் ஒன்று தந்திடனும்!
ஆதவன் வரும் முன் காலையிலும்
அவன் கடந்த பின் மாலையிலும்
விரிந்த வானம் நம்முடனே கைகோர்த்து
மகிழ்ச்சியைப் பகிர்ந்திடனும்!
இப்படி இருந்திட வேண்டும் எனில்
மனிதர்கள் நாமே.
கரும் புகை தவிர்த்திடனும்…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942