கணவன்மார் நல்ல ஆயுள் வேண்டி
கௌரியை அகம் வணங்கி
மனைவிமார் விரதம் கொண்டு
நோன்பை நன்கு அனுசரிப்பர்
நல் மஞ்சள் சரடைக் கொண்டு
நல்லாள் இவள் பூட்டிக் கொள்வர்
கணவரே நல் சிறப்புடன் வாழ
தியாகமே பல அது செய்வர்
நோன்புக்கே படையலாயாகும்
அடையது சுவையாய் மாறும்
மஞ்சள் நூல் என்று நினைக்க வேண்டாம்
அஞ்சாள் இவள் அழைத்தால் வரும் தெய்வமே
பதியை தன் உயிரினும் மேலாய்ப்
பதி வ்ரதை பணிவது கொண்டால்
அதிபதி அரியும் அயனும் அரனும்
நல் ஆசித் தருவர்
வணங்கும் நம் தமிழரின் பண்பு
வானம் போல் உயர்ந்து நிற்கும்
தம் வாழ்வையே நமக்கு அளிக்கும்
மங்கையர் திலகம் வாழ்க!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!