அன்பே நீ வந்தாய் ஏன் வந்தாய்
ஆசையாய் விளையாடிய பாவலரை
இணையத்தில் மூழ்கடிப்பு செய்தாய் – நீ
உண்ண உணவை இல்லாது செய்தாய் – நீ
ஊரை சுடுகாடாக மாற்றி காலத்தை மாற்றி விட்டாயே – அன்பே
எட்டில் பறந்த எம்மை
ஏக்கமாய் உறங்க செய்தாய் – நீ
ஐயத்தோடு வீதியில் செல்ல அரசும் காவலாம்!
ஒன்றாய் சுற்றிய காலம் போய் ஒதுங்கி வாழும் அவலமாம்!
ஓதல் இணையம் ஆக
ஓயாது கண்கள் கலங்கினவே!
ஔவியம் அற்ற மனிதமாய் பள்ளிகள் பூட்டைக் கண்டதே!
கால மாற்றமும் உன்னாலே
கயமை நோயும் உன்னால் தானே
கொரோனா நீ அன்பனா? இல்லை எம் காலனா?
பதில் கூறு இல்லையேல்
நிலைமாற்றி விலகி சென்று விடு!!
சாந்தகுமார் லக்சனா
இலங்கை
மறுமொழி இடவும்