பசுஞ் சோலையிலே பூத்த
பட்டு ரோஜாப் பூ நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குட்டைவால் குழந்தை நீ
கீச் கீச் என்று தினம்
கீதம் எழுப்பும் வீணை நீ
பொந்துக்குள்ளே வாழ்ந்தாலும்
பூமி ரசிக்கும் புள்ளினம் நீ
ஆனால்
ராட்சதக் கைகளால்
றெக்கைகள் வெட்டப்பட்டு
சிறைக்குள் சிக்கிய
சிங்கார அழகியாக
இருப்பதும் நீயே!
மறுமொழி இடவும்