குடியரசு துணைத் த‌லைவர்

குடியரசு துணைத் த‌லைவர்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 63-வது பிரிவு குடியரசு துணைத் த‌லைவர் பதவிக்கு வழி செய்கிறது. இவர் நாடாளுன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

குடியரசுத் தலைவர் உடல் நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் குடியரசு துணைத் தலைவர் குடியரசுத் தலைவரின் பணியினை மேற்கொள்வார்.

குடியரசுத் தலைவர் பதவி விலகினால், இறப்பு அல்லது குற்றச்சாட்டுகள் மூலம் பதவி காலியாகும் போதும் அவரது பணிகளை மேற்கொள்வார்.

 

இந்திய குடியரசு துணைத் த‌லைவருக்கான தகுதிகள்

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

லோக் சபை என அழைக்கப்படும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய தகுதி உடையவராக இருக்க வேண்டும்.

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவியில் இருக்கக் கூடாது.

நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்ட மன்ற அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. அப்படி உறுப்பினராக இருந்தால் குடியரசு தேர்தலுக்கு முன்னர் விலகி விட வேண்டும்.

குடியரசு துணைத்தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது, அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு குடியரசு தலைவர் பொறுப்பை துணைகுடியரசுத் தலைவர் வகிக்கலாம்.

குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக குடியரசு துணைத் தலைவர் இரண்டாவது இடத்தைப் பெறுகிறார்.

இவருக்கு என்று தனிப்பட்ட பணிகள் வரையறுக்கப்படவில்லை.

இவர் ராஜ்ய சபையின் தலைவராக செயல்படுகிறார்.

குடியரசு தலைவரின் பதவி விலகல் (ராஜினாமா), இறப்பு அல்லது நீக்கம் ஏற்படும்போது, புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது பணிகளை மேற்கொள்கிறார்.

 

தேர்ந்தெடுக்கும் முறை

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றிப் பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் மேதகு முகம்மது அமீத் அன்சாரி ஆவார். இவர் ஆகஸ்டு 11, 2007 ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆகஸ்டு 7, 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.