ஜொ.மல்லூரி உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

ஜொ. மல்லூரி உரை கவிதைத் ‘தேன் அடை’ மழையாய் இருந்தது.

ஜொ. மல்லூரி கும்கி காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த சிறந்த நடிகர்.

அவர் விருதுநகர் புத்தகத் திருவிழாவில் தமிழ் கவிதை மழையில் திகட்ட, திகட்ட நனைய வைத்தார். தமிழ் காட்டும் அறநெறிகளை படம் பிடித்துக் காட்டினார்.

‘தமிழ் நாகரிகம்’ குமரி முனையில் கடல் கொண்டு போன லெமுரியா கண்டத்தில் தொடங்கி, மதுரை வந்து, திராவிடமாகி, சிந்து தொட்டு, எகிப்து கடந்து, கிரேக்கம் தழுவி, ரோமானியம் வழியே ஐரோப்பியா கண்டு, உலக நாகரிகமாக உருமாறிய வரலாற்றினை நயம்படக் கூறினார்.

மானுடத்தின் அளவுகோல் நாகரிகம் மற்றும் பண்பாடு என்றால் நாகரிகத்தின் ஆதாரம் அறிவியல்; பண்பாட்டின் ஆதாரம் இலக்கியம் என்றார்.

தமிழ் இலக்கியங்களின் வரம் ‘அறம்’ எனக் கூறி மனுநீதிச் சோழன், சிபி சக்கரவர்த்தி, தாயுமானவர், வள்ளலார் என வழி வழியாக தமிழர் வளர்த்த ‘அறம்’ குறித்து கவிதை பாடினார் மல்லூரி.

1970 முதல் 2022 வரை ‘காதல் அறம்’ கடந்து வந்த பாதையினை இவர் கூறிய விதம் மிக அருமை.

காதலுக்கு உயர் திணையினை தூது அனுப்பக் கூடாது மற்றும் ‘மடலேறுதல்‘ எனும் முறைப்படி காதலை தெரிவிக்கும் விதம் எல்லாம் பண்டைய தமிழர் காத்த ‘காதல் அறம்’ குறித்த சிறப்பான பதிவுகளாகும்.

40 வயது வரை வாழ்க்கை ஒரு பந்தயமாகவும் அதன் பின் பயணமாகவும் அமைய வேண்டும் எனக் கூறினார் மல்லூரி.

பயணம் சிறக்க, நேசிப்பதற்கு சில மனிதர்கள், வாசிக்க சில புத்தகங்கள் என அன்பும் அறிவும் சமமாக கலந்த கலவையாக வாழ்க்கை இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட ஜொ. மல்லூரி உரை அருமை.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: