பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்
ஓ! திரையிட்டு இன்னும் புன்னகை மறைப்பேனோ
சோப்பு நுரையுடன் கழண்ட என்கை ரேகையை மீட்பேனோ
செல்லிடைப் பேசியில் சொந்தங்கள் வளர்ப்பேனோ
சொல்லாடல் செய்து மகிழ்ந்த வசந்தங்கள் வாராதோ
விருந்தோம்பி இல்வாழ்வேனோ
வருவிருந்துதான் பார்த்திருப்பேனோ
இல்லை, விருந்துபுறத்துத் தானுண்பேனோ
அனிச்சம் குழையா நிலை யெப்போது பெறுவேனோ
பின்னிய வலையில் சிலந்தியே விழுந்திடுமோ
வலைப் பின்னலில் வீழ்ந்த எம் குழந்தைகள் மீண்டிடுமோ
கண்தாம் கழல்வது எவன்கொலோ
திரைகடலோடித் திரவியம் தேடுமெம் கணவனைக் காண்பேனோ
இல்லை, திரை நிழலூடேயெம் வாழ்வைத் தொலைப்பேனோ
த.மாரிமுத்து
மன்னார்குடி
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!