உச்சிவெயில் எங்கள்
மச்சியைப் பிளக்குதே!
காய்ந்த நதியெல்லாம்
கண்ணீர் விடுகிறதே!
காலம் பதில் சொல்லும்
எனக் காத்திருக்குதே!
உடலெல்லாம் வியர்வையில்
நனைந்து போகிறதே..
வெட்கையில் உலர்ந்து
போகிறதே!
ஊணின்றி உறக்கமின்றி
உள்ளம் வாடிப் போகுதே!
உதவிட வந்து
பெய்யடா மழையே!
தர்பூசணியும் இளநீரும்
தாகம்தான் தணிக்கும்..
தரணியை எப்படிக்
குளிர்விக்கும்?
ஏர்பூட்டிய மாடுகள்
உழவின்றி சோர்ந்துவிட்டன…
பார்மகள் மகிழ்வுற
பெய்யடா மழையே!
மழையே! கோடைமழையே!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!