யாரும் யாருடனும்
எவ்வளவு தான் பேசினாலும்
எதுவும் எள்ளளவும்
புரிந்துகொள்ளப் படவில்லை
எதிரெதிரே வரும் மனிதர்கள்
முகம் பார்த்து முகம் பார்த்து
ஓய்ந்த பாடு இல்லை
புரியாத அறியாமை தான்
மனிதனின் மூலதனம்
பெபல் கோபுரத்தால்
வந்த வினை
மனிதனைக் கடவுள் சபித்தான்
அப்படி என்ன இருக்கிறது
மனிதனுக்கு உள்ளே
திறக்க முடியாத கதவுகள்
காஃப்காவின் கூண்டு
சிறைச்சாலையின் சுவர்கள்
இம் மாபெரும் இயற்கை
வளர்ந்து நிற்கிறது
உன் முன்னால்
நீ விட்ட இடத்தில்
இருந்து தொடர
மறுமொழி இடவும்