விளையாட உதவும் சணல் சாக்கு
மழைக்கால விரிப்பாகும்
மணல் கூட சுமக்க உதவும்
களத்துமேட்டு நெல் மணியை
கொண்டு வரவும் துணையாகும்
நைந்து கிழிந்து போனாலும்
மண்ணுக்கு உரமாகும்
இதை விரட்டி நெகிழியது
வீதியில நுழைஞ்ச பின்னே
நீர்வளமும் நிலவளமும்
நெக்குறுகி நின்று போச்சு…
வருங்கால சந்ததியின்
வளர்ச்சிக்கும் தடையாச்சு…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!