சாகாவர பருக்கை …

இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …

மனித மணற் குவியலில்
ஒவ்வொரு துகளின்
தன்மையை அறியும்
வன்மமற்ற அது
இப்போது போல் எப்போதும் இனி …

நக்கல் கலந்த நையாண்டி ஓடுகளோடு
நத்தையாய் நகர்ந்தவைகளும்
சொருகிக் கொண்ட
ஞான சிறகுகளின் சூட்சமத்தில்
பிரபஞ்ச வெளிதனில்
இயல்பாய் விரிகிறது அது …

உள்ளிருந்து உருவிய ஜீவனை
வெளியெங்கும் வியாபிக்க விட்டு விட்டு
வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறது
சமாதியாக்கி விடப்பட்ட உடம்பு …

இப்போது யாதுக்குள்ளும் யாதும் ஆகிட
இறையென இயம்புவதில்
நியாயம் இருப்பதாகவே
நியாயப்படுத்தப்படுகிறது நியாயமாய் …!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.