மூன்று சாளரங்கள்
என் அறையில்.
கார்முகில்கள் திரண்டிருந்த
பேரழகில் லயிக்க
ஒரு சாளரம் திறந்தேன்.
பிறந்த மழலையின்
பிஞ்சுக் கரங்களால்
வருடி விட்டது
ஈரக்காற்று!
மறு சாளரம் திறந்தேன்.
மென்மைக் காதலின்
மிருது கரங்களால்
கோதி விட்டது
வாடைக் காற்று!
மூன்றாவது சாளரம்
திறக்க
தீர்த்தங்களைத் தெளித்து
ஆசீர்வதிக்கத் துவங்கியது
மழை!
மூட வேண்டியதாயிற்று
மூன்று சாளரங்களையும்
வலுப்பெறும் வேளையில்!
தங்கம் மூர்த்தி
புதுக்கோட்டை
9443126025
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!