திறந்த வீட்டுக்குள்
ஏதோ நுழைவதைப் போல் அப்போது
நுழைய மறுக்கும்
சுயமரியாதையின் கால்கள்…
அறிவு ஒன்றையே
ஆயுதமென
தூக்கித் திரிகிறது
கூழைக் கும்பிடுகளின்
குடுமியை அறுத்தெறிவதற்கு…
ஆணவம் அறியாமை
திமிர் கர்வம்
வீம்பு வீராப்பு என்று
வியாக்யான விரிசல்களை
கவலையின்றிக் கடக்கக் கூடியவை அவை
பலம் பலவீனத்தின்
பல் பிடித்துப் பார்த்து
தாழ்வு மனப்பான்மையை
தகர்த்தெரிந்து
தன்னம்பிக்கை தடம் பதிக்கிறது
தைரியமாய் சுயமரியாதை!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!