சொல்ல வேண்டிய சொற்கள்
சுருங்கி மடங்குகையில்
சொல்ல வேண்டியவைகளின்
முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல்
போய் விடுகின்றன!
சொல்லியே ஆக வேண்டிய
கட்டாயத்தில் களம் காணும் சொற்கள்
சொல்லாத தவிப்புகளில் நின்று
சொல்லிக் கொள்வதில்லை
அதன் பலவீனங்களை!
சொல்வதன் பின் எழும்
யாதொன்றினுக்கும்
சொல்லின் காரணிகளாய்
பொறுப்பேற்றுக் கொள்ளாத போது
சொல்லுதலில் இருக்கும்
எதிர்பார்ப்புகளின் முடிவுகளை
முன்னிலைப்படுத்தியே
முடங்கியிருக்கக் கூடும்
அந்த சொற்கள்!
சுற்றி வலைக்கும் சூத்திரங்களை
சக்ர வியூகங்களென
பிரம்மாண்டப் படுத்தாமல்
கரை ஒடித்து சீறும் நீராய்
கடந்து வரும் சொற்களிலேயே
பொங்கும் நுரையாய்
முகம் காட்டக் கூடும்
தைரியம் தைரியமாய்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!