காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!
விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன சில நடனங்கள்!
சாபங்களுக்கு சரணாகதியாகும்
யாதொன்றிலிருந்தும் விலகி
சலனங்களையும் சபலங்களையும்
விதைத்துச் செல்கிறது ஏதோ ஒன்று!
ஏகபத்தினி விரதங்களை
யாகங்களில் எரித்து
சூர்ப்பனகையின் சூத்திரத்தில்
ஒடிந்து போகின்றன ராம பாணங்கள்!
இறுக்கி சுருக்கி பாறையாக்கிக்
கொள்ளும் நீருக்குள்
பயணிப்பதில்லை படகுகள் ..!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
சிறப்பாக இருக்கிறது கவிதை