ஞாபகங்கள்
ஊஞ்சலைப் போல்.
அது நம்மை
முன்னுக்கும்…. பின்னுக்கும்…..
அழைத்துச் செல்லும்;
ஆடி அசைந்து
ஓய்வுறும் வரை.
நிகழ்காலத்தின்
மையப் புள்ளியிலிருந்து விலகி
கடந்த காலத்திற்கும்
எதிர் காலத்திற்கும்
சம பங்கு அசைவுகளை
பரிமாறிக் கொண்டிருக்கும்.
அங்கும்…. இங்குமாக
அலைந்துக் கொண்டிருக்கும்வரை
கீச்…. கீச்யென
அமைதியற்ற நிலையே……
ஊஞ்சலுக்கும்
ஊஞ்சல் ஆடுபவனுக்கும்.
சிதவி.பாலசுப்ரமணி
கைபேசி: 7448705850