(தண்டல் என்றால் வரிவசூல் என்று பொருள். வரி வசூல் பற்றிய ஓர் அழகிய கவிதை)
சொற்ப வருவாய்க்கு சொல்லாமல் கட்டுகிறான்
சொர்ணத்தை பதுக்குபன் கட்டாமல் மிரட்டுகிறான்
சதிகள் செய்பவன் சட்டத்தை ஆள்கிறான்
மதியும் உள்ளவன் சங்கடத்திற்கு ஆளாகிறான்
குடிக்கும் நீருக்கும் மடிக்கும் கணினிக்கும்
கொடுக்கும் தண்டல்கள் எங்கே போகிறதோ…
எதிர்த்து கேட்டாலோ தண்டனை பாய்கிறது
எதார்த்தம் மட்டுமிங்கு மதியாய் தேய்கிறது
தண்டல் விதித்து பண்டல் நிறையுது
சுரண்டல் மட்டும் சுயம்பாய் நிற்குது
நீதிக்கு கிடைத்த தண்டனை நீளுது
அநீதிக்கு கிடைத்த அர்ச்சனை வாழுது…
இறையாண்மையின் இதயம் இறந்தும் விட்டது
இரைப்பையும் இங்கே சுருங்கியும் கிடக்குது
குடியரசின் பொருளும் படிப்படியாய் மறைந்தது
குடிமக்கள் மனமும் பொடிப்பொடியாய் உடைந்தது…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353