தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்

“ஏன்டா கிளாசுக்கு லேட்டு?

போய் வெளியே நின்னு கிளாசைக் கவனி” கண்ணனைத் திட்டினார் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு ஆசிரியர்.

அடுத்த நாளும் அவன் வகுப்புக்குத் தாமதமாக வந்தான்.

”இன்னைக்கும் கிளாசுக்கு லேட்டா? கிளாஸ் முடிஞ்ச பிறகு, என்னைத் தனியா வந்து பாரு!” கோபமாகச் சொன்னார் ஆசிரியர்.

அவன் தலைக்குனிவைப் பதிலாகத் தந்து விட்டுக் கிளம்பினான்.

”நீ படிச்சா என்ன? படிக்காட்டி என்ன?” கோபமாகப் பேசினார்.

அன்றிலிருந்து அவர் கண்ணனைக் கண்டிப்பதில்லை.

பரீட்சை முடிந்து ரிசல்ட் வர கண்ணன் முதல் மாணவனாகத் தேர்வாகி இருந்தான்.

பயிற்சி வகுப்பு பாராட்டு விழா.

“தினமும் லேட்டா வர்ற கண்ணன் மேல எனக்குக் கோபம்.

ஒருநாள் கார்ல சந்தை வழியாய்ப் போனேன்.

அதைப் பார்த்த பிறகு இவன ஏன் லேட்டுன்னு திட்டல.

இவனோட கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை இன்னைக்கு இவன ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக்கியிருக்கு!”

அவர் சொல்லி முடிக்கவில்லை; கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தன.

எம்.மனோஜ் குமார்