தமிழ் இணைய இதழ்கள் நிறைய உள்ளன. ஆனாலும் அவை நிறையப் பேருக்குத் தெரியாமல் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் ஐந்து அல்லது ஆறு இணைய இதழ்கள் பற்றி அறிந்து வைத்திருந்தாலே அதிகம்தான். நம்மைப் போன்றவர்களுக்கு, தமிழில் உள்ள இணைய இதழ்கள் பற்றி ஒரு நல்ல அறிமுகம் கொடுக்கிறார் பாரதிசந்திரன்.
பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன், இனிது இதழில் இணையம் அறிவோமா? என்ற தலைப்பில் வாரம் ஒரு தமிழ் இணைய இதழ் பற்றி எழுதிய தொடரின் கட்டுரைகள் இவை.
ஓர் ஆராய்ச்சி மாணவன் போல் செயல்பட்டு, ஒவ்வொரு தளத்தையும் நன்கு அறிந்து கொண்டு, அதன் தனித்துவத்தையும் புரிந்து கொண்டு, அதனைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை எழுதினார். அவை தமிழ் இலக்கிய வாசகர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன.
இந்தத் தொடரின் நோக்கம் பாரதிசந்திரன் அவர்களுடைய வார்த்தைகளில்
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இணையம் காணக் கிடைப்பதால், இதில் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை வாழ்வில் காணாமலும் அறியாமலும் போய்விடலாம்.
எனவே, சிறந்த இணையப் பக்கங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இத்தொடர். இணையத்தின் தன்மையை வரிசைப் படுத்தியோ, முன்னிலைப் படுத்தியோ பட்டியலானது என்ற அறிவிப்பு அல்ல இத்தொடர்.
பார்த்தவற்றில், அறிந்தவற்றில், பயனடைந்தவற்றில் சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதுவே இணையம் அறிவோமா தொடர்.
இணைய இதழ்களைப் பற்றி அறிய நீங்களும் படித்துப் பாருங்களேன்.
தமிழ் இணைய இதழ்கள்
இணையம் அறிவோமா? முன்னுரை மற்றும் ஆர்கிவ்.காம்
செந்தமிழ் சொற்களஞ்சியம் – அகரமுதலி
வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்
விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்
அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்
சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி
தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்
தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்
தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி
தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி
சிறுகதைகளின் சங்கமம் – சிறுகதைகள்.காம்
நீரோடையான இலக்கியம் – நீரோடை.காம்
பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்
அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்
வினவு – தமிழின் புரட்சித் தளம்
யாவரும்.காம் – புது யுகத்தின் முகம்
பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்
தமிழ் இணைய இதழ்கள் பலவற்றையும் அறிந்து படித்துப் பயன் பெறுவோம்
Comments
“தமிழ் இணைய இதழ்கள் – பாரதிசந்திரன்” மீது ஒரு மறுமொழி
அருமை
அருமையான தொகுப்பு
சந்திரசேகர் ஐயாவின் கடும் உழைப்பு.
ஒரு டிஜிட்டல் நூலகம் போல் எல்லோருக்கும் பயன்படக்கூடிய குறிப்பாக தமிழ் ஆர்வலர்கள் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என்னைப் போன்ற அறிமுக எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு பொக்கிஷம்..