யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

வாழ்க்கைப் பாடம்

யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர். Continue reading “யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்”

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன.

பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “விலங்குகளுக்கு பற்கள் விழுமா?”

யானையும் ஓநாயும்

யானையும் ஓநாய்களும்

முல்லை வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வசித்து வந்தன. அதில் ஓநாய் கூட்டமும் ஒன்று.

அவை கண்ணில்படும் விலங்குகளை கூட்டமாக வேட்டையாடி தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. Continue reading “யானையும் ஓநாயும்”

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.

இரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இரசவாதம் செய்த படலம்”

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”