தினை பாயசம் செய்வது எப்படி?

தினை பாயசம் அருமையான சிற்றுண்டி வகையினுள் ஒன்று. இதனை விருந்து சமையல்களிலும், விரத வழிபாடுகளிலும் சமைக்கலாம்.

இது சுவையானதும், சத்து நிறைந்ததும் ஆகும். இனி சுவையான தினை பாயசம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 25 கிராம் (¼ பங்கு)

பாசிப் பருப்பு – 100 கிராம் (1 பங்கு)

மண்டை வெல்லம் – 200 கிராம் (2 பங்கு)

தண்ணீர் – 75 மில்லி லிட்டர் (¾ பங்கு)

தேங்காய் – ½ மூடி (பெரியது)

முந்திரிப் பருப்பு – 5 எண்ணம் (அரைப் பருப்பு பெரியது)

கிஸ்மிஸ் பழம் – 10 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

தினை அரிசியை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பின் வறுத்த தினை அரிசியை ஆறவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

 

தினையை வறுக்கும்போது
தினையை வறுக்கும்போது

 

 

பொடியாக்கிய தினைமாவு
பொடியாக்கிய தினைமாவு

 

பாசிப் பருப்பினை வெறும் வாணலியில் போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும்.

வறுத்த பாசிப் பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.

ஒரு விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

பின் பாசிப் பருப்பினை மசித்து விடவும்.

 

மசித்த பாசிப்பருப்பு
மசித்த பாசிப்பருப்பு

 

மண்டை வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும்.

பின் அதனை 75 மில்லி லிட்டர் ( ¾ பங்கு) தண்ணீரில் போட்டு சர்க்கரை கரையும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

இதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

½ மூடி தேங்காயில் மூன்று சில்கள் எடுத்து அதனுடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

மீதமுள்ள தேங்காயில் 100 மில்லி லிட்டர் (ஒரு பங்கு) தேங்காய் பால் தயார் செய்யவும்.

வாயகன்ற பாத்திரத்தில் 75 மில்லி லிட்டர் ( ¾ பங்கு) தண்ணீர் ஊற்றி பொடித்த தினை அரிசியை கட்டி இல்லாமல் கரைத்து பின் அடுப்பில் சிம்மில் வைத்து சூடேற்றவும்.

 

தினைக்கரைசலை சூடேற்றும்போது
தினைக்கரைசலை சூடேற்றும்போது

 

தினை அரிசிக் கரைசல் லேசாகக் கெட்டியானதும் வேக வைத்த பாசிப் பருப்பு, தேங்காய் முந்திரி விழுது, சர்க்கரைக் கரைசல், நசுக்கிய ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

தேங்காய்முந்திரி விழுதினைச் சேர்க்கும்போது
தேங்காய்முந்திரி விழுதினைச் சேர்க்கும்போது

 

பாசிப்பருப்பை சேர்க்கும்போது
பாசிப்பருப்பை சேர்க்கும்போது

 

சர்க்கரைக் கரைசலை சேர்க்கும்போது
சர்க்கரைக் கரைசலை சேர்க்கும்போது

 

கலவை கொதித்தவுடன் அடுப்பினை அணைத்துவிட்டு தேங்காய்பாலை ஊற்றிக் கிளறவும்.

 

தினைக் கரைசல் கொதிக்கும்போது
தினைக் கரைசல் கொதிக்கும்போது

 

தேங்காய்ப் பாலைச் சேர்க்கும்போது
தேங்காய்ப் பாலைச் சேர்க்கும்போது

 

பின் வாணலியில் 2 ஸ்பூன் நெய்விட்டு அதில் கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு வறுத்து பாயசத்தில் கொட்டவும்.

 

கிஸ்மிஸ் பழத்தை வறுக்கும்போது
கிஸ்மிஸ் பழத்தை வறுக்கும்போது

 

சுவையான தினை பாயசம்
சுவையான தினை பாயசம்

 

சுவையான தினை பாயசம் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பாலுக்குப் பதிலாக காய்ச்சி ஆறிய பாலை சேர்த்து பாயசம் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.