அரும்பாய் மலருதே
கரும்பாய் இனிக்குதே
அடடா நட்பினில் உள்ளொன்றும்
புறமொன்றும் இல்லாமல் நீடிக்குதே ( அரும்பாய் …)
தோழமை கொண்டிட தோல்வி ஓடும்
கரங்களும் இணைந்திட வெற்றி கூடும்
தோழனின் திருமுகம் தோன்றும் நேரம்
தீண்டுமோர் தென்றலாய் மறையுமே என்னில் பாரம் (அரும்பாய் …)
கடந்திடும் காலம் கண்களில் தெரிகிறதே ஓஹோ
இருந்திடும் வரையில் பிரிவினைத் துரப்போமே ஓஹோ
உருவத்தில் வேறாய் உள்ளத்தில் இணைந்தோமே ஓஹோ
உள்ளத்தில் வேர்விட உயிரினில் கலந்தோமே ஓஹோ
நெடுநேரம் மகிழ்கிறேன்
தொடுந்தூரம் காண்கிறேன் நட்பாலே (அரும்பாய் …)
கருவறை வாழும் கடவுளை மறந்தேனே ஓஹோ
கண்முன் நீயே கடவுளாய் நின்றாயே ஓஹோ
இருகரம் பிடித்தே இணைந்தே நின்றாயே ஓஹோ
இருதயம் துடிக்கும் துடிப்பினை உணர்ந்தாயே ஓஹோ
நீ நீங்கும் நொடி முதல்
வேரில்லா மரம் ஆவேனே (அரும்பாய் …)
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!