நமது அன்னை பாரதம்
அமைதி விரும்பும் தாயகம்
இப்பாரிலுள்ள நாடெல்லாம்
பெருமை பேசும் ஓரிடம்
தியாக பூமி பாரதம்
இங்கு காண்பதெல்லாம் மாருதம்
இங்கு பல சாதி உண்டு ஆகிலும்
எங்கும் தேச நலனே ஓங்கிடும்
திறமை கொண்டு நாட்டுவோம்
பலத்துறையில் முதன்மை ஆகுவோம்
நல்லறமே காட்டும் பாரதத்தை,
நம் சிரமே தாழ்த்தி வணங்குவோம்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!