ஓரவிழிப் பார்வையிலே
என் உயிரைப் பறிப்பவளே
தீராதக்காதலிலே – எனை
தீக்குளிக்க செய்பவளே
யாரென்ன சொன்னாலும் – எனை
அணைத்துக் காப்பவளே
வாராது மாமணியாய்
என் வாழ்வில் வந்தவளே
சேராத செல்வமெலாம்
எனைச் சேரச் செய்தவளே
ஆறாத நோயகற்றும்
அருமருந்தாய் வந்தவளே
மாறாத அன்பினாலே
என் மனமெல்லாம் நிறைந்தவளே
நூறாண்டு நான் வாழ
உன் நிழல் ஒன்றே போதுமே
காதலிலே கசிந்துருக….
கடவுள் கூட நமக்காக காத்திருக்கும்
நம்பிக்கை கொடுக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942