நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி

நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்
தும்பிக்கையான் பாதம் பணிவர்.

சகலமும் தந்திடும் கலைமகள் நினைபவர்
அகிலமே ஆள்பவர் காண்.

வேலுண்டு மயிலுண்டு துணையுண்டு வழியுண்டு
வேலனில் மனம் வீழ்வதே மேல்.

ஆடலைக் காணவே சேர்கவே தில்லை
ஆனந்த கூத்தனில் ஆழ்.

சக்கர வலத்தனை நாள்தொறும் உரைப்பவர்
இக்கணம் தேடியே சேர்.

தாமரைச் செல்வியை சிந்தனை செய்பவர்
ஆமவர் ஆள்வர் உலகு.

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: