சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலே
சூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே
தூய்மை கொண்டு தூவி நின்று மலர் பாதமே என்று நம்பியே
தொட்டில் ஆடும் முன்னமே நாரணன் பேர் ஓதினான்
பக்தியே பெரும் மூலமே என்று நின்ற பாலகன்
ஆதி மூலமே நீ அறிந்து உறுதி கொண்டு நம்பினான்
பகைவர் நெஞ்சம் பதர தீமை தெறித்து ஓடும் நொடியிலே
பக்தி கொண்ட நெஞ்சினார்க்கு வாழ்வில் என்றும் நன்மையே
நாரணா என்று கூறுவார்க்கு நன்மை கூடும் எந்நாளுமே
நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com