விட்டுவிடுங்கள்
விட்டுவிடுங்கள்
பிறரைப் பற்றி சிந்திப்பதை
பிறரைப் பற்றி பேசுவதை
பிறரோடு ஒப்பிடுவதை
செல்லும் வாழ்க்கை அழகானது
உங்கள் வாழ்வை அழகாக்குங்கள்!
கவனமாக கையாளுங்கள்
நன்றியுடையோரை மதியுங்கள்
நன்மை உண்டாகும்
பிடியில்லாத இருபக்க கூர்கத்தியும்
நன்றிகெட்டவர்களும் ஒன்று
கவனமாக கையாளுங்கள்!
நம்பாதே
கால்வாயைத் தாண்ட உதவாதவன்
கடலைத் தாண்ட உதவுவான் என நம்புவது
புலி புல்லைத் தின்பது போன்றது
கேட்பதெல்லாம் உண்மையாகா
ஒருவரைப் பற்றி பிறர் கூறுவதை
நம்பி முடிவெடுப்பதென்பது
குருடன் வண்டி ஓட்டுவதற்கு
சமமான செயல்பாடு
நன்றியுணர்வு
எவர் ஒருவர் இறுதிவரை ஒரேமாதிரி
பழகுகிறாரோ அவர்தான்
விஸ்வாசத்தின் அடையாளம்
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர் அல்ல
வாழ்வோம் நன்றியுணர்வோடு!
ஒட்டாது
துரோகியும் நன்றிகெட்டவரும்
திருந்துவதென்பது
உடைந்த முட்டையை
ஒட்ட வைப்பது போன்றது!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
சார், அருமை. பளிச் என்று நறுக் என்று தைக்கிறது.