ஒரு நாள் ஒருமுறையாவது வாய்விட்டு சிரி
குறைந்தது எட்டு டம்ளர் நீர் அருந்து
விரும்பும் புத்தகம் படி
செய்ய நினைத்ததை உடனே செய்
பழைய நண்பர்களை சந்தி
தினமும் ஒன்று புதிதாய் அறி
நடை பயிற்சி செய்
பழம், காய்கறி தினமும் உண்
நண்பரிடம் பகிர்
கவிதை இலக்கியம் படி
பிறரை மகிழ்வி
பிறரை மனதாரப் பாராட்டு, ஊக்குவி
ஏதாகினும் மன்னித்து விடு
பொறாமை, பேராசை, கோபம் விலக்கு
அனைத்தையும் துணிவாக எதிர் கொள்
எல்லாம் நன்மைக்கே என நினை
குழந்தைகளிடம் அன்பை மட்டும் விதை
மனம், உடல் ஆரோக்கியம் பேணு
எப்போதும் வெற்றி சாத்தியமல்ல என உணர்
சிறுசிறு தோல்வி அவசியம்
நல்ல நண்பர்கள் நமக்கு அவசியம்
நம்பிக்கை அவசியம், ஆனால் தன்பலம் உணர்
பிறரிடம் நல்லதை நோக்கு
கடந்த காலத்தின் பாடம் உணர்
நிகழ்காலம் பயன்படுத்து
எதிர்காலத்திற்கு தயார் ஆகு
இன்முகம் பழகு
வெற்றி என்பது பணம் மற்றும் பொருள் மட்டுமல்ல
மகிழ்ச்சி மனதைப் பொறுத்தது
இறையை நினை; தீதும் நன்றும் பிறர் தர வாரா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!