வில்லம்பு சொல்லம்பு என மேதினியில் இரண்டுண்டு.
வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம்.
வில்லம்பு பட்டதா என் மார்பில்
பார்வேந்தே நின்குலத்தை சுட்டதடா
என் வாயின் சொல் என்று ஔவையார் பாடியதும்
ஆறாதே வாயினாற் சுட்ட வடு என்ற வள்ளுவன் வாக்கும்
நாம் பேசும் வார்தைகள் குறித்து சிந்திக்க வைக்கின்றது.
நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு எனஆசிரியரிடம் வசைசொல் பெற்றவர்கள் வாழ்வெல்லாம் துயருற்றவர்களாவே வாழ்ந்திருப்பர்.
கோபத்தில் கூட குழந்தைகளை வசை சொல்லால் திட்டாதீர்; அவை பலித்து விடக்கூடும் என பெரியவர்கள் சொன்னது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; நம் உடன் பணியாற்றும் சக அலுவலர்கள் நம் நட்பின் தோழமைகளுக்கும் பொருந்தும் தானே!
நல்ல சொற்களை நாளும் விதைப்போம்!
நல்ல விளைவை நாளும் பெறலாம்!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!